Advertisements

அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழ்நாட்டில் அணுகுண்டு விழுந்தது போல திமுக ஆட்சி உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
மதுரை மாவட்டம் எஸ்.எஸ்.காலனி பகுதியில் மகா பெரியவா ஜெயந்தி உற்சவ விழாவில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டமன்ற
எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நிகழ்ச்சி விருதுகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து., செய்தியாளர்களிடம்
பேசிய அவர், அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழ்நாட்டில் அணுகுண்டு விழுந்தது போல திமுக ஆட்சி உள்ளதாக விமர்சனம் செய்தார்.
ஆட்சியில் இதுவரை 7,000 கொலைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு
விட்டதாக குற்றம் சாட்டினார்.
Advertisements




