
Today rasipalan:இன்றைய ராசிபலன் – 06.10.24
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்:
குரோதி வருடம் புரட்டாசி மாதம் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
நட்சத்திரம்: இன்று இரவு 11.03 வரை விசாகம் பின்பு அனுஷம்
திதி: இன்று காலை 06.04 வரை திரிதியை பின்பு சதுர்த்தி
யோகம்: மரண யோகம்
நல்ல நேரம் காலை: 07.45 – 08.45
நல்ல நேரம் மாலை: 03.15 – 4.15
ராகு காலம் மாலை: 04.30 – 6.00
எமகண்டம் மாலை : 12.00 – 1.30
குளிகை மாலை: 03.00 – 4.30
கௌரி நல்ல நேரம் காலை: 10.45 – 11.45
கௌரி நல்ல நேரம் மாலை: 1.30 – 2.30
சூலம்: மேற்கு
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி
ராசிபலன்
மேஷம்

எதிர்காலத்திற்காக ஒரு தொகையைச் சேமிக்க துவங்குவீர்கள். வீட்டுக் கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். குடும்பத்தின் அடிப்படை பொருளாதாரத்தை மேம்படுத்தச் சில திட்டங்கள் தீட்டுவீர்கள். பெண்களுக்கு மாமியார் வழி உறவினர்கள் நட்பு பாராட்டுவர்.
அதிர்ஷ்ட நிறம்: கரும் பச்சை
ரிஷபம்

குடும்பத் தலைவிகள் தங்கள் பிள்ளைகளுக்காகக் கல்வி கட்டணம் சிரமமின்றி கட்டுவதற்கு தற்போதிலிருந்தே சேமிப்பீர்கள். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
மிதுனம்

குழந்தை பாக்யம் கிடைக்கும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உடல் நிலையில் அவ்வப்போது சிறுசிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சரியாகும். வம்பு, வழக்குகளில் நீங்கள் குற்றமற்றவர் என நிரூபணமாகும். அரசு வழிகளில் ஆதாயம் உண்டாகும். மாணவர்கள் உயர் படிப்பு படிக்க வெளிநாடு செல்வர்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
கடகம்

பிள்ளைகளால் நற்பெயரும் கௌரவமும் அதிகமாகும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும். திட்டவட்டமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசியலில் செல்வாக்கு உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
சிம்மம்

தாங்கள் விரும்பிய காரியத்தை முடிக்கத் தன்னம்பிக்கையும், துணிச்சலும் வரும். வீண் வறட்டு கவுரவத்திற்காகச் சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்
கன்னி

புது வேலைக் கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். எதிர்பாராத பயணங்களால் தங்களுக்கு பெரும் தொகை கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
துலாம்

வீட்டினை அழகுபடுத்துதல் மற்றும் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் பணிகளில் வேகமடைவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். அரசியலில் செல்வாக்குக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
தனுசு

உடலில் கை, கால், மூட்டு வலி வந்து போகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். திடீர் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி எல்லாம் உண்டாகும். நீங்கள் யாரையும் தேடிச் சென்று பார்க்கும் இயல்பில்லாதவர். ஈகோவை பார்க்க வேண்டாம். தங்களுக்கு வேண்டும் என்றால் நாம்தான் அணுக வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
மகரம்

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் நட்புறவாகப் பழகுங்கள். சொந்த வீடு வாங்க முயற்சித்தவர்களுக்கு இடம் பார்க்கச் செல்வீர்கள். அது தங்களுக்கு பிடித்தபடி அமையும். தம்பதிகளின் ஒற்றுமைக்குக் குறை இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கும்பம்

குழந்தைக்காகக் காத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்குக் கர்ப்பம் தரிக்கும் யோகம் உண்டாகும். குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உத்யோகத்தில் சம்பள உயர்வுக்குண்டான செய்தி கிடைக்கும். குடும்பத் தலைவிகள் மதிக்கப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மீனம்

இன்று உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரக்காரருக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்



