Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 29.12.2023

Advertisements
மேஷம்

 

மேஷ ராசிக்காரர்களே, குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேலும் வலுவடையும்.  உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலையில் முழு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கவும். வியாபாரிகள் இன்று எந்த வேலையையும் செய்யும்போது அவசரப்பட வேண்டாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருக்கும். மேலும் இன்று தியானத்தின் மூலம் மன அமைதியை பெறலாம். இன்று தட்சிணாமூர்த்தி வணங்கி வர இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 8.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.  எல்லாவற்றிலும் வெற்றியைப் பெறலாம். இன்று உங்களின் அனைத்து வேலைகளும் நீங்கள் நினைத்தபடி முடிவடையும். உத்தியோகஸ்தர்களின் சில முக்கிய வேலைகள் முடியும். வியாபாரிகளுக்கு இன்று நல்ல லாபம் கிட்டும். நீண்ட நாட்களாக சட்ட சிக்கலால் தடைப்பட்ட வேலை இன்று முடிவடையும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தின் அடிப்படையில், இன்று உங்களுக்கு கலவையான பலன்களைக் கொண்ட நாளாக இருக்கும். மேலும் இன்று பைரவரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் என்று அதிர்ஷ்ட எண் 1.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களே, இன்று பணம் சம்பந்தமான பிரச்சனை தீரும். இன்று நீங்கள் கடன் வாங்கியதை திருப்புவீர்கள். சுறுசுறுப்பு கூடும். கூட்டு வியாபாரம் கைகூடும். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். வேலையுடன், உங்கள் அன்புக்குரியவர்களுக்காக போதுமான நேரத்தை செலவிடுவது மனமகிழ்ச்சியை கொடுக்கும். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த, அதிக கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற கவலைகளிலிருந்தும் விலகி இருங்கள். மேலும் இன்று விநாயகரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 2.

கடகம்

 

கடக ராசிக்காரர்களே, வீட்டில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உறவுகள் மேம்படும். பேச்சு மற்றும் நடத்தையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் அலுவலகத்தில் நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலை இன்று முடிவடையும். வணிகர்களின் நிதிப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வலுவான வாய்ப்புள்ளது. உங்களின் இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக அமையும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உணவில் அக்கறை தேவை. மேலும் இன்று நரசிம்மரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 3.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களே, இன்று அலுவலகச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறலாம். வியாபாரிகள் இன்று எதிர்பார்த்ததை விட அதிக லாபம் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். இன்று உங்கள் தந்தையிடமிருந்து சில பயனுள்ள ஆலோசனைகளைப் பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும். உங்கள் அன்புக்குரியவரைப் புறக்கணிப்பதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று நன்றாக இருக்கும். தாய் வழி உறவினரால் ஆதாயம் உண்டு சகோதரர்களே நன்மைகள் ஏற்படும் மேலும் இன்று திருமாலை வணங்கி வர இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 6.

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களே திருமண வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆடம்பர செலவுகளைத் தவிர்க்கவும். தொழிலதிபர்கள் பெரிய ஒப்பந்தங்கள் செய்ய வாய்ப்பு கிடைக்கும். விரைவில் உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். உடல்நலம் சம்பந்தமான விஷயங்களில், அலட்சியமாக இருக்க வேண்டாம். பிள்ளைகள் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். தெரியாதவர்களிடம் பேச்சுக் கொடுக்க வேண்டாம். மேலும் இன்று பிரத்தியங்கிரா தேவி வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 7.

 

துலாம்

 

துலாம் ராசிக்காரர்களே, குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட வலுவான வாய்ப்புள்ளது. இன்று திடீரென்று உங்களுக்கு  பார்க்காத எதிர்பார்க்காத பண வரவு உண்டு. இன்று உங்களுக்கு வேலை அடிப்படையில் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். பணி சுமை கூடும். வேலையில் பணிச்சுமை இருந்தால இன்று உங்கள் முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்கவும். வேலையுடன், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் இன்று ஆஞ்சநேயரை வணங்கி வர இனிமையான நாளாகமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 4.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே, உணர்ச்சி ரீதியாக நீங்கள் சற்று பலவீனமாக உணர்வீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியதில் கவனம் தேவை. மேலும் இன்று வாராஹி வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 9.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். இன்று எந்தவொரு கடினமான காரியத்தையும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளின் பொருளாதார நிலை வலுவடையும். நீங்கள்  குடும்ப வாழ்வில் சற்று மனஅழுத்தம் இருக்கும்.  பணம் சம்பந்தமாக வாக்குவாதங்கள் ஏற்பட்டுப் பின் மறையும்  தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தியானம் ஒன்றே சிறந்த வழி. மேலும் இன்று சித்தர்களை வழங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 5.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு நல்ல தொடக்கமாக இருக்கும். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள். இன்று அலுவலகத்தில் உங்களின் அனைத்து வேலைகளையும் குறித்த நேரத்திற்கு முன்பே செய்து முடிப்பீர்கள். உங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உங்கள் உயர் அதிகாரிகளை பெரிதும் ஈர்க்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். முக்கிய வணிக முடிவுகளை எடுப்பதற்கு ஏற்ற நாள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் உடல்நிலையில் இன்று பெரிய முன்னேற்றம் காண்பீர்கள். இன்று நவகிரக வழிபாடு செய்வதால் இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 3.

கும்பம்

 

கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலையில் நல்ல நாளாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகள் பெரிய வாடிக்கையாளர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். சொத்து சம்பந்தமாக ஏதேனும் தகராறு இருந்தால், நீங்கள் மிகவும் சிந்தனையுடன் முன்னேற வேண்டும். ஆரோக்கியத்தைப் புறக்கணிக்காதீர்கள். நீண்ட நாட்களாக இழுத்து வந்த வழக்கு சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். மேலும் இன்றி சங்கரநாராயணரை வணங்கி வர இனிமையான நாளாகமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 1.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களே, வேலையில் இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களின் வருமானம் கூடும். நீங்கள் விரும்பிய இடத்திற்கு மாற்றப்பட விரும்பினால், இன்று சில நல்ல செய்திகளைப் பெறலாம். தொழில் விரிவாக்கத் திட்டங்களும் இன்று முன்னேறும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். தந்தையின் மூலமாக ஆதாயம் உண்டு. உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். மேலும் இன்று சூரிய பகவான் அனைவரும் இனிமையான நாளாக அமைய இன்றைய அதிர்ஷ்ட எண் 2.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *