Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 14.01.2024

மேஷம்

 

மேஷ ராசி அன்பர்களே இன்று பூஜை வழிபாடுகளின் மூலம் நினைத்த காரியம் ஈடேறும். சுற்று வட்டாரத்தில் கௌரவம் உண்டாகும். சிலருக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். தந்தை வழி உறவினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உயர்கல்வியில் இருந்து வந்த குழப்பம் விலகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் படிப்படியாக குறையும் பண வரவு அதிகரிப்பால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று நீங்கள் முனீஸ்வரரை வழிபட்டு வந்தால் கவலைகள் நீங்கி மகிழ்ச்சியான நாளாக அமையும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இன்று நண்பர்களின் வழியில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். கல்வி பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்கான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் சந்திப்பு அனுகூலமாக இருக்கும். என்று நீங்கள் காளியம்மனை வழிபட்டு வந்தால் மனதில் புத்துணர்ச்சி உண்டாகும்.

 

மிதுனம்

 

மிதுன ராசி அன்பர்களே இன்று நீங்கள் மனதிற்கு பிரியமானவர்களுடன் பயணங்களை மேற்கொள்வீர்கள். நேர்மைக்கான மதிப்பு கிடைக்கும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். சிலருக்கு புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். என்று நீங்கள் நாக தேவர்களை வழிபட முயற்சிகளில் இருந்து வந்த இடையூறுகள் விலகும்.

கடகம்

 

கடக ராசி அன்பர்களே இன்று நீங்கள் நுட்பமான சிந்தனைகளின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சியான தருணம் அமையும். புதிய நட்பின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புக்களை வெற்றி கொள்ளும் திறன் மேம்படும். பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளிடம் அனுசரித்து சென்றாள் நன்மைகள் உண்டாகும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். இன்று நீங்கள் அம்பிகையை வழிபட்டு வந்தால் நன்மைகள் உண்டாகும்.

 

சிம்மம்

 

சிம்ம ராசி அன்பர்களே இன்று உங்கள் குடும்பத்தினரிடையே ஒற்றுமை மேம்படும். அரசு பணியாளர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத தன வரவு உண்டாகும். புதிய இலக்குகளால் ஆதாயம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். மற்றவர்கள் மீதான கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபட இனிமையான அமையும்.

கன்னி

 

ராசி அன்பர்களேஇன்று உங்கள் மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும் சிறு மற்றும் குறு தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மறைமுக திறமைகளை பாராட்டுக்களை பெறுவீர்கள். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வரவுகளில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். தாய் வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும். என்று நீங்கள் கருடாழ்வாரை வழிபட காரிய சித்தம் உண்டாகும்.

 

துலாம்

 

ராசி அன்பர்களே இன்று கேளிக்கை சார்ந்த செயல்களில் ஈடுபாடு உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட தன வரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். சீருடை பணியாளர்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப பாராட்டுக்களும் ஆதரவும் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். என்று நீங்கள் மகாலட்சுமியை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசி அன்பர்களே இன்று உங்கள் உடல் சோர்வுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். நண்பர்களுடனான கலந்துரையாடல்களின் மூலம் புதிய நம்பிக்கையும் தெளிவும் ஏற்படும். வர்த்தகம் சார்ந்த துறைகளில் லாபம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான கைகூடும். தன வரவுகள் சாதகமாக இருக்கும். இன்று நீங்கள் பைரவரை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

 

தனுசு

 

தனுசு ராசி அன்பர்களே இன்று உங்கள் மனதில் புரியாத புதுவிதமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பெண்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வீண் செலவுகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரிகளுக்கு நற்செய்திகள் உண்டாகும். குடும்ப இன் மூலம் தன வரவும் சேமிப்பும் அதிகரிக்கும். இன்று நீங்கள் குருமார்களை வழிபட என்ன தெளிவு உண்டாகும்.

 

மகரம்

 

மகர ராசி அன்பர்களேஇன்று பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக செய்யும் முயற்சிகள் வெற்றியை தரும். உங்கள் சிந்தனை தெளிவாக இருக்கும் மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். தன வரவுகளுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். கடன் சார்ந்த நெருக்கடிகள் அகலும். நெருப்பு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். என்று நீங்கள் துர்க்கை அம்மனை வழிபட முயற்சிகள் ஈடேறும்.

கும்பம்

 

கும்ப ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு உறவுகளின் உதவி கிடைக்கும் வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வாக்கு வன்மையால் பொருளாதார உயர்வு ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். தன வரவுகளின் மூலம் சேமிப்புகள் மேம்படும். மனதளவில் மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் அதிகரிக்கும் சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைக்கும். என்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபட தடைகள் விலகும்.

 

மீனம்

 

மீன ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். சமூக பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர் பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். மாணவர்கள் முகநூல் மற்றும் இணையதளங்களை மட்டும் பயன்படுத்தவும். உறவினர்கள் வருகையால் நன்மைகள் உண்டாகும். மாற்றமான சிந்தனைகளின் மூலம் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். இன்று நீங்கள் அர்த்தநாரீஸ்வரரை வழிபட இனிமையான நாளாக அமையும்.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *