Today Rasi Palan -இன்றைய ராசிபலன் – 20.09.2024

Advertisements

Today Rasi Palan – 20.09.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆவணிமாதம் 20-ம் தேதி வெள்ளிக்கிழமை

நட்சத்திரம் : இன்று காலை 09.38 வரை ரேவதி பின்பு அஸ்வினி

திதி: இன்று அதிகாலை 03.39 வரை துவிதியை பின்பு திரிதியை

யோகம்: அமிர்த யோகம்

நல்ல நேரம் காலை: 9.15 – 10.15

நல்ல நேரம் மாலை: 4.45 – 5.45

ராகு காலம் காலை: 10.30 – 12.00

எமகண்டம் மாலை: 3.00 – 4.30

குளிகை காலை: 7.30 – 09.00

கௌரி நல்ல நேரம் காலை: 12.15 – 01.15

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 – 7.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: பூரம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்


வீட்டில் வேலையாட்களிடம் கோபத்தினை காட்டாமல் தட்டிக் கொடுப்பது நல்லது. சமூக ஆர்வலர்கள் மேடைகளில் ஆவேசமாகப் பேச வேண்டாம். உடல் நலத்தில் அக்கறை அவசியம். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

ரிஷபம்


வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களை மேற்கொண்டு அதிக லாபத்தை அடைவர். உத்யோகஸ்தர்களை சக ஊழியர்கள் பாராட்டுவர். பெற்றோரின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள். அவர்களின் ஆலோசனையைப் பரிசீளித்துப் பாருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

மிதுனம்


அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிக்காரர்களிடம் இணக்கமாகச் செல்வது நல்லது. அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும்போது வாய் நிதானம் தேவை. கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

கடகம்


தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் கீழ்படிந்து நடப்பர்.. இரவில் நீண்ட தூர பயணத்தைத் தவிர்க்கவும். வியாபாரிகளிடம் வியாபார யுக்திகளை கற்றுக் கொள்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலுக்கு நன்கொடை வசூலிப்பீர்கள். தியானம் மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்


இன்று சில கசப்பான அனுபவங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள்.காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பயணத்தின் போதும் சிறுசிறு விபத்துகளைத் தவிர்க்கக் கூடுமானவரை பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கன்னி


பிள்ளைகள் பெற்றோர் சொல்வதை கேட்டு நடந்து கொள்வர். வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்கள் உதவுவர். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். உடல் பலம் பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்


உங்கள் பிள்ளைகள் விளையாட்டுப் போட்டியில் பரிசு பெற்று உங்களுக்குப் பெருமையைத் தேடித்தருவர். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட ஊழியர்களுக்குத் தகுந்த பாடம் இன்று கிடைக்கும். மனைவியிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

விருச்சிகம்


அரசியல்வாதிகளுக்குப் புகழ், கௌரவம் உயரும். இரும்பு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களால் நன்மை உண்டு. பெண்கள் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குவர். பணவரவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

தனுசு


பங்கு சந்தையில் ஈடுபட்டவர்கள் நிலவரத்தை அறிந்து செயல்படுவர். மனைவிவழி உறவினர்களுடன் மீண்டும் இணைவீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். உத்யோகஸ்தர்களுக்கு தன் கீழ் உள்ள பணியாளர்களிடமிருந்து ஒத்துழைப்பு கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

மகரம்


இளைஞர்களுக்குத் திருமண முயற்சிகள் தாமதமாகும். வீட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவி உங்களுடைய தவறுகளைச் சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அமைதியை கையாளவும். மாணவர்களுக்குப் பெற்றோர்களின் அரவணைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கும்பம்


உங்கள் பிள்ளைகளுக்காகக் கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. அரசு சம்பந்தப்பட்ட ஒப்பந்த வேலைகளில் தங்களுக்கே வெற்றி நிச்சயம். நட்பு வட்டம் விரிவடையும். உற்சாகமான தினமாக இன்று அமையும். வேலை தேடுபவர்களுக்கு போட்டித் தேர்வுகள்மூலம் நினைத்த உத்யோகம் கிடைக்கும்..

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

மீனம்


மார்க்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள், ஏஜென்சி எடுப்பீர்கள். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். தேகம் பொலிவு பெறும். மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *