Today Rasi Palan – இன்றைய ராசிபலன் – 17.09.2024

Advertisements

Today Rasi Palan – 17.09.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் புரட்டாசி மாதம் 1ம்- தேதி செவ்வாய்க்கிழமை

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 02.27 வரை சதயம் பின்பு பூரட்டாதி

திதி : இன்று காலை 11.21 வரை சதுர்த்தசி பின்பு பௌர்ணமி

யோகம் : மரண யோகம்

நல்ல நேரம் காலை : 07.45 – 08.45

நல்ல நேரம் மாலை : 4.45 – 5.45

ராகு காலம் மாலை : 03.00 – 04.30

எமகண்டம் காலை : 09.00 – 10.30

குளிகை மாலை : 12.00 – 1.30

கௌரி நல்ல நேரம் காலை : 10.45 – 11.45

கௌரி நல்ல நேரம் மாலை : 7.30 – 8.30

சூலம் : வடக்கு

சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்


மார்க்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள், ஏஜென்சி எடுப்பீர்கள். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். தேகம் பொலிவு பெறும். மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

ரிஷபம்


மனைவியிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். அரசியல்வாதிகள் ஆதாரம் இல்லாமல் மேடைகளில் ஆவேசமாகப் பேச வேண்டாம். உடல் உற்சாகத்துடன் காணப்படும். வேலை தேடுபவர்கள் போட்டித் தேர்வுகள்மூலம் நினைத்த உத்யோகம் கிடைக்கும். இரும்பு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மிதுனம்


மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கடகம்


தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாகப் பேசும் வார்த்தைகள் கூடப் பிரச்சினையைத் தந்து நிரந்தரமாகப் பேசாமல் போக வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

சிம்மம்


பெரியவர்களின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள். வீட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை நீங்கும். பணவரவில் தாமதம் இல்லை. வீட்டில் நிம்மதி கிடைக்கும். பெற்றோரின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. வியாபாரிகளுக்குக் கடன் பிரச்சினை தீரும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கன்னி


கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். விவசாயிகளுக்குக் கேட்ட கடன் தொகை கிடைக்கும். அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும். திருமண பேச்சு வார்த்தை சுபமாக முடியும். வெளியூர் பயணம் தள்ளிப் போகும். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும்போது வாய் நிதானம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

துலாம்


கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். வாகனம் ஓட்டும்போது வாகனத்தின் முக்கிய ஆவணங்களை வைத்துக் கொள்வது நல்லது. பணவரவு அதிகரிக்கும். உங்கள் பிள்ளைகளுக்காகக் கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. அரசு சம்பந்தப்பட்ட டென்டர் போன்றவைகளில் வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

விருச்சிகம்


பங்கு சந்தையில் ஈடுபட்டவர்கள் நிலவரத்தை அறிந்து நிதானமுடன் செயல்படவும். பிரபலமானவர்களால் நன்மை உண்டு. தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உடல் நலம் சிறக்கும். பெண்கள் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து அத்தியாவசிய பொருள்களை வாங்குவர். அரசியல்வாதிகளுக்குப் புகழ், கௌரவம் உயரும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

தனுசு


திடீர் பணவரவு உண்டு. சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். வேலைச்சுமை இருக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

மகரம்


வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். அரசியலில் செல்வாக்கு உயரும். அலைச்சல் அதிகரிக்கும். திட்டவட்டமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கும்பம்


பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். குல தெய்வ பிரார்த்தனையைச் செய்து முடிப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வங்கிக் கடன் உதவியும் கிட்டும். வேலை தேடுபர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும். மளிகைக் கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும். பயணங்கள் நன்மையில் முடியும்.

அதிர்ஷ்ட நிறம் : பொன்வண்ணம்

மீனம்


பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் போக்கே சென்று அவர்களை உங்கள் வழியில் வரவழையுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *