Today Gold Rate In Chennai: இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை! கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாகக் குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ஒரு ரூபாய் 30 காசுகள் குறைந்துள்ளது.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இது அனைவரும் அறிந்தது. குறிப்பாகத் தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள்மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாகத் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,660-க்கு விற்பனையானது.

இன்றைய (ஆகஸ்ட் 24) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,280-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,695-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,150-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.57,200-ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை ஒரு ரூபாய் 30 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி ரூ.93.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.93,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *