today gold rate:உச்சத்தில் தங்கம் விலை!

Advertisements

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.55,200க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில தினங்களாகத் தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தைக் கண்டு வருகிறது. அதன் படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. நேற்று முன் தினம் மே 18ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில், இன்று (மே 20) மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.55,200க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ளி விலை எவ்வளவு?

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.101க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *