
சென்னை: நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று(ஆகஸ்ட் 15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கேரள கடலோர பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கோவை நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 17 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (ஆகஸ்ட் 16)
நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கன முதல் மிகக் கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 17ம் தேதி
கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், நீலகிரி, திருப்பூர் மற்றும் தேனி ஆகிய 4 மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழையும், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 13 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.Image 1308182
ஆகஸ்ட் 18ம் தேதி
கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், நீலகிரி, திருப்பூர், தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


