
திருப்பதி ஏழுமலையானை முன்பதிவு செய்யாமலே இலவசமாக விரைவில் தரிசனம் செய்ய இந்த வழியைப் பயன்படுத்தினாலே போதும்.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் பக்தர்கள் நாள் கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
அதேபோல், கூட்டநெரிசலை குறைக்கும் வகையில் பக்தர்கள் வசதிக்காக இலவச தரிசனம், ரூ.300 சிறப்பு தரிசனம், விஐபி பிரேக் தரிசனம், லக்கி டிப் தரிசனம் ஆகிய முறைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார். ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்கான இந்த டிக்கெட்களை பெற வேண்டும் என்றால் மூன்று மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்து வைக்க வேண்டும்.
இந்நிலையில், பிள்ளைகளுக்குத் தேர்வு முடிந்து கோடை விடுமுறை தொடங்கி இருப்பதால் பலரும் குடும்பத்துடன் திருப்பதி சென்று வர விரும்புவார்கள். ஆனால், முன்பதிவு செய்யாமல் எப்படி ஏழுமலையளானை சரிதனம் செய்வது என்ற கவலை வேண்டாம். ஏழுமலையானை விரைவில் தரிசிக்க ஒரு சூப்பர் வாய்ப்புள்ளது.
திவ்ய தரிசனம் டிக்கெட் (SSD), தினமும் அதிகாலை 3 மணிக்கு விஷ்ணு நிவாசம், சீனிவாசம் வளாகம், பூதேவி வளாகத்தில் வழங்கப்படும். இந்த டிக்கெட்டுகளுக்கு ஆதார் அட்டை கட்டாயம். SSD டிக்கெட்டுகளை கொடுக்கும்போது நேரம் மற்றும் நுழைவு விவரங்கள் கொடுக்கப்படும். அதன் அடிப்படையில் நீங்கள் ஏழுமலையானை இலவசமாக விரைவாகவும் தரிசிக்கலாம்.

