6 வாரங்களில் ஆழ்துளைக் கிணறுகளை மூட உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டத்தில் கைவிடப்பட்ட ஆழ்குழாய்க் கிணறுகளையும், கல்குவாரிகளையும் ஆறு வாரத்துக்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த காந்திமதிநாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கைவிடப்பட்ட ஆழ்குழாய்க் கிணறுகள், கல்குவாரிகளில் சிக்கி ஆட்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் அவற்றை மூட உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், இராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு,  தூத்துக்குடி மாவட்டத்தில் கைவிடப்பட்ட ஆழ்குழாய்க் கிணறுகளையும், கல்குவாரிகளையும் ஆறு வாரத்துக்குள் மூட வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து ஆறு வாரங்களுக்குப் பின் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *