Thirukoilure: ரேசன் கடை ஊழியரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்!

Advertisements

ரேசன் கடையில் வழங்கும் பருப்பு மற்றும் அரிசியில் புழு மற்றும் பூச்சி இருப்பதாக கூறி கடை ஊழியரிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

திருக்கோவிலூர் அருகே நியாய விலை கடையில் அழகிய நிலையில் புழு மற்றும் பூச்சியுடன் புட்டு போன்று விற்பனை செய்யப்படும் பருப்பு மற்றும் அரிசியால் கடை ஊழியரிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நெடுமுடையான் கிராமத்தில் உள்ள அரசு நியாய விலைக் கடையில் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் அழுகிய நிலையில் புழு மற்றும் பூச்சியுடன் கலந்து புட்டு போன்று பருப்பு மற்றும் அரிசி விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கடை ஊழியரிடம் பொதுமக்கள் ஏன் இது போன்று விற்பனை செய்கிறீர்கள் தரமான அரிசி மற்றும் பருப்பு விற்பனை செய்ய வேண்டியது தானே என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் தரமற்ற முறையில் அரிசி மற்றும் பருப்புகளை விற்பனை செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தரமான பொருள்களை பொது மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *