தேனி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் பின்னடைவை சந்தித்து வருகிறார். திமுகவின் தங்க தமிழ்ச் செல்வன் முன்னிலை வகிக்கிறார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் மூன்றாவது முறையாகப் பாஜக ஆட்சியைப் பிடிக்குமா? அல்லது இண்டியா கூட்டணி வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஸ்டார் தொகுதியாகப் பார்க்கப்படும் தேனி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகத் தங்க தமிழ்ச்செல்வன், பாஜக கூட்டணி தரப்பில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், அதிமுக சார்பில் வி.டி. நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திமுக வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வன் 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஆண்டிப்பட்டி தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான டிடிவி. தினகரன் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதால் இந்தத் தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.
இந்நிலையில் தேனி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் பின்னடைவை சந்தித்து வருகிறார். திமுகவின் தங்க தமிழ்ச் செல்வன் முன்னிலை வகிக்கிறார்.
வேட்பாளர்கள்:
திமுக- தங்க தமிழ்செல்வன்
அமமுக- டிடிவி. தினகரன்
அதிமுக- நாராயணசாமி
நாம் தமிழர்- மதன் ஜெயபால்

