
பழங்குடியின மக்களால் மட்டுமே தயாரிக்கப்படும் மதுபானம்! மத்திய பிரதேசத்தில் மஹூவா மதுபானத்தை வர்த்தக நோக்கில் தயாரிக்கும் உரிமை பழங்குடியினருக்கு மட்டுமே கொடுக்கபட்டுள்ளது…
மஹூவா மரத்தின் உலர்ந்த மலர்களிலிருந்து தயாரிக்கப்படும் மதுபானத்தை வர்த்தக நோக்கில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. மத்திரபிரதேச அரசாங்கம், இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றித் தரும்படி முதலில் அழைத்தது அனிருத்தா முகர்ஜியைத்தான்.
இந்தியாவில் தயாராகும் உள்நாட்டு மதுபானத்தின் கலை களஞ்சியம் என்று இவரைக் கூறலாம். 1980-ன் பிற்பகுதியிலிருந்து 1990-கள் வரை வட இந்தியாவில் பத்திரிக்கையாளராகப் பணியாற்றிய முகர்ஜி, அதன்பிறகு நீண்டகாலம் இந்திய வனவிலங்குச் சங்கத்தின் இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.
பழங்குடியின மக்கள் காய்ச்சிய முதல் மஹூவா மதுபானத்தை மோண்டு (Mond) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. இந்த மதுபானத்தை பிலாலா பழங்குடியினர் தயார் செய்கின்றனர். விரைவில் வரப்போகிற மஹூலா மதுபானத்தை கோண்டு பழங்குடியினர் தயாரிக்கின்றனர்.
இரு பழங்குடி இனங்களும் சுய உதவி குழுக்களின் உதவியோடு இதை உற்பத்தி செய்கின்றனர்.
2021-ம் ஆண்டு மஹூவாவை பாரம்பரிய மதுபானம் என அறிவித்த மத்தியபிரதேச அரசாங்கம், உள்நாட்டு பழங்குடியின மக்கள் காய்ச்சிய முதல் மஹூவா மதுபானத்தை மோண்டு (Mond) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது.
இந்த மதுபானத்தை பிலாலா பழங்குடியினர் தயார் செய்கின்றனர். விரைவில் வரப்போகிற மஹூலா மதுபானத்தை கோண்டு பழங்குடியினர் தயாரிக்கின்றனர். இரு பழங்குடி இனங்களும் சுய உதவி குழுக்களின் உதவியோடு இதை உற்பத்தி செய்கின்றனர்.
இந்த மதுபானங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் பழங்குடியினரின் வாழ்க்கை மேம்படுவதோடு வரலாற்று தவறுகளைச் சரிசெய்யவும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறுகிறார் முகர்ஜி. மத்திய பிரதேசத்தில் மஹூவா மதுபானத்தை வர்த்தக நோக்கில் தயாரிக்கும் உரிமை பாங்குடியினருக்கு மட்டுமே கொடுக்கபட்டுள்ளது. இதுதான் சரியான நடைமுறையாகும். ஆனால் மகராஷ்டிரா மற்றும் வேறுசில மாநிலங்களில் இந்த உரிமை அனைவருக்கும் கொடுக்கபட்டுள்ளது. மோண்டு மற்றும் மோஹுலா என்ற பெயரில் விற்கப்படும் இந்த மதுபான பாட்டில் ஒன்றின் விலை ரூ.850 ஆகும். மத்தியபிரதேசம் முழுதும் உள்ள பார்கள் மற்றும் மதுபானக் கடைகளில் இது கிடைக்கும்.
இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திராவில் மஹூவா மரத்தை அதிகமாகப் பார்க்கலாம். மத்திய பிரதேசத்தில் உள்ள கோண்டு மற்றும் பைக்கா சமூகத்தினர் உள்பட மத்திய இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இருக்கும் பழங்குடி சமூகத்தினரின் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது இந்த மரம். இவர்களின் நாட்டுபுற கதைகளில் நீங்காமல் இடம்பிடிக்கும் இந்த மஹூவா மரத்தைத் தெய்வத்திற்கு நிகராக மதிக்கிறார்கள். இம்மரத்தின் பழங்கள் மற்றும் பூக்கள் சாப்பிடுவதற்கு உகந்தது. இதிலிருந்து தயாரிக்கப்படும் மதுபானத்தை ஆங்கிலேயர் காலத்தில் “நாட்டு சரக்கு” என அழைத்தார்கள்.
இந்தியாவின் பாரம்பரிய மதுபானங்களில் ஒன்றாக இருந்து வந்த மஹூவா, தற்போது வேகமாக அழிந்து வருகிறது. நம் நாட்டின் அசலான பழங்குடியினரை அடையாளப்படுத்தும் பொருளாக இருக்கும் மஹூவா, நாட்டுச் சாராயத்தை விடப் பழமையானதாகும். ஏறக்குறைய 13 மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் இந்த மதுபானத்தை குடிக்கிறார்கள். இந்தியாவின் தேசிய மதுபானம் என்று கூறுவதற்கு இதற்கு முழு தகுதியுள்ளது. பெரும்பாலும் இந்த மஹூவா மதுபானத்தை பழங்குடியின பெண்கள் தான் காய்ச்சி வடிப்பார்கள்.
மோண்டு மற்றும் மோஹூலா மதுபானம் பாரம்பரிய பழங்குடியின பொருட்களின் சுவையைக் கொண்டது. இதில் சுவைக்காக வேறு பொருட்களோ அல்லது நிறமிகளோ சேர்க்கபடவில்லை. குடிப்பதற்கு இதமாக இருக்கும் இந்த மதுபானம், மலர்ச்சுவையை கொண்டிருக்கும். இந்த மதுபானத்தை வேறு மநிலங்களில் விற்பனை செய்யவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளது மத்தியபிரதேச அரசாங்கம்.



