Murder: பெற்ற தாயை கொலை செய்த இறக்கமற்ற மகன்!

Advertisements

குடும்ப பிரச்சனை காரணமாகப் பெற்ற தாயை  மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இதுகுறித்து  வடபாக்கம் போலீசார் விசாரணைநடத்திவருகின்றனர்.

தூத்துக்குடி வடக்கு விநாயகர் தெருவைச் சேர்ந்த ஞானதீபம் இவரது மனைவிபுலோடில்டா இவர்களுக்கு  ஸ்டாலின், ராஜா, ஜெயன், ஜான்சி என்னும் மூன்று மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

புலோடில்டா தனது கணவரை விட்டுப் பிரிந்து தனது இரண்டாவது மகன் ராஜாவுடன் வசித்து வருகிறார் ஜெயன் இரவு நேர பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார்.

அடிக்கடி தனது தாய் வீட்டிற்கு வந்து  பார்ப்பதும் அப்போது பிரச்சினை ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது இந்த நிலையில் இரவு ஜெயன் தனது தாயை பார்ப்பதற்கு வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட இருவரின் வாக்குவாதமும் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெயன் தனது தாயை சரமாரியாகக் குத்தி விட்டுத் தப்பி ஓடிவிட்டார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட இருவரின் வாக்குவாதமும் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெயன் தனது தாயை சரமாரியாகக் குத்தி விட்டுத் தப்பி ஓடிவிட்டார்.

தகவல் அறிந்து வந்த  தூத்துக்குடி வடபாகக் காவல் நிலைய ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்து உடலைக் கைப்பற்றித் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் மேலும் தப்பி ஓடிய ஜெயனை தேடி வருகின்றனர். பெற்ற தாயை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *