நடிகை கார் மோதி தொழிலாளி பலி!

மும்பையின் கண்டவளி என்ற இடத்தில் போயிசர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருகிறது. நேற்றிரவு சில பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, மராட்டிய நடிகை ஊர்மிளா கொத்தாரே அந்த வழியாகப் படபிடிப்பை முடித்துக் கொண்டு காரில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். வேகமாக வந்த கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேலை செய்து கொண்டிருந்தவர்கள்மீது மோதியது.

இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடிகை ஊர்மிளா கொத்தாரே லேசான காயத்துடன் உயிர் தப்பிய நிலையில், டிரைவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தை ஏற்படுத்தியது ஹூண்டாய் வெர்னா கார் என்றும், வேகமாக வந்ததால் விபத்தை ஏற்படுத்தியது என்றும், ஏர்பேக் நடிகையுடன் உயிரைக் காப்பாற்றியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டிரைவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *