Thangalaan Movie: “தங்கலான்” படக்குழுவின் புது பிளான்!

Advertisements

தமிழ் சினிமாவில் இந்த 2024ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று தான் தங்கலான். முதல் முறையாகப் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ளார் விக்ரம்.

தமிழ் திரையுலகில் தனக்கெனத் தனி பாதை வகுத்து அதில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு மிகச்சிறந்த நடிகர் தான் விக்ரம். உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு, தான் நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்திற்காகத் தன்னுடைய உடலை வருத்தி, உருமாற்றி நடிக்கும் தன்மையைக் கொண்ட வெகுசில நடிகர்களில் விக்ரம் அவர்களும் ஒருவர்.

கடந்த 34 ஆண்டுகளாகத் தமிழ் திரை உலகம் மட்டுமில்லாமல் இந்திய மொழிகள் பலவற்றில் முன்னணி நடிகராகத் திகழ்ந்துவரும் விக்ரம் இறுதியாகக் கடந்த 2023 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு முதல் முறையாகப் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் இணையும் தங்கலான் திரைப்படத்திலும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் “தங்கலான்” திரைப்படம் கடந்த 2023ம் ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில தொழில்நுட்ப பணிகள் முடிக்காமல் இருந்த நிலையில் இந்த 2024 ஆம் ஆண்டு துவக்கத்திலேயே இந்தத் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் இந்தத் திரைப்படத்தை இயக்கி வரும் ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளர் தனஞ்ஜெயன் அவர்கள் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட தகவலின்படி தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் வரவிருக்கும் தேர்தலுக்குப் பிறகு இந்தத் திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், பல மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாக உள்ளதால் அனைத்து மொழிகளிலும் சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *