தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நாளைக் காலைக் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது ஃபெஞ்சல் புயல் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையிலிருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மின் கம்பி விழுந்ததால் தாம்பரம்- கடற்கரை இடையிலான புறநகர் ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாகக் கனமழை கொட்டிவரும் நிலையில் சென்னையில் புறநகர் ரெயில் சேவை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.