
தாம்பரம் அருகே குழந்தைக்களுக்கு வாங்கி சென்ற செட்டிநாடு சிக்கனில் புழுக்கள் இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.தங்களின் உணவகத்தில் சுத்தமாக உணவு சமைப்பதாகவும் இது போன்ற தவறு நடந்ததில்லை என்று ஓட்டல் உரிமையாளர் குற்றசாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்க்கு தாம்பரம் ராமகிருஷ்னா நகரை சேர்ந்தவர் இருசக்கர வாகன மெக்கானிக்கான சௌந்தர்ராஜன் (33) தனது குழந்தைகளுக்கு முடிச்சூர் சாலையில் உள்ள ஆலிப் பிரியாணி கடையிலிருந்து செட்டினாடு சிக்கன் பார்சலாக வாங்கி சென்றுள்ளார்,
வீட்டிற்ற்க்கு சென்று பார்சலை திறந்து சாப்பிட்டு கொண்டிருந்தபோது திடிரெனச் சிக்கனில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்,
உடனடியாகப் பார்சலை மீண்டும் கடைக்கு எடுத்துச் சென்று உணவக உரிமையாளரிடம் காட்டியபோது தங்களுக்கு இதுக்கும் எந்த வித சம்பதமும் இல்லை என்று அசால்டாகத் தெரிவித்துள்ளார்,
இதனால் ஆத்திரம் அடைந்த சௌந்தர்ராஜன் தாம்பரம் மாநகராட்சி உணப்பு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் யிடம் புகார் அளித்துள்ளார்,
உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் உணவகத்தின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் சமூக ஆர்வலர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து உணவகத்தை முற்றுகியிட்டு உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,
தொடர்ந்து தங்களின் உணவகத்தில் சௌந்தர்ராஜன் நான்கு வருடங்களாக உணவு வாங்கி வருவதாகவும் தின்மும் சுத்தமாக உணவைச் சமைத்து வருவதாகவும் இதற்க்கு தாங்கள் பொறுப்பில்லை எனறு மறுப்பு தெரிவித்துள்ளார்.

