Surgery: கைவிரலில் கால் விரல் பொருத்திய மருத்துவர்கள்!

Advertisements

Surgery | Toe | Thumb | Chennai

இளைஞர் ஒருவருக்கு கட்டை விரலுக்குப் பதில் கால் விரல் பொருத்தி சென்னை மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தியுள்ளார்…

சென்னை: மருத்துவ துறையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது இயந்திரங்களின் பாகங்களைக் கழட்டி மாட்டுவது போல் மனிதர்களின் உறுப்புகளையும் கழட்டி பொருத்தி மருத்துவர்கள் சாதித்து வருகிறார்கள். சிறுநீரகம், இதயம், கல்லீரல், கண் போன்ற உறுப்புகளில் மாற்று அறுவை சிகிச்சை சாதாரணமாகிவிட்டது. அதே போல் உடலில் அத்தியாவசிய தேவை எனும்போது ஒரு உறுப்புக்குப் பதில் இன்னொரு உறுப்பை எடுத்து மாட்டும் அற்பு தத்தை மருத்துவர்கள் நிகழ்த்துகிறார்கள்.

32 வயதான இளைஞர் ஒருவர் தான் பணிபுரியும் தொழிற்சாலையில் எந்திரத்தில் கைச்சிக்கியதில் வலது கைக்கட்டை விரலும், சுட்டு விரலும் துண்டித்து விழுந்தது. தனியாகத் துண்டிக்கப் பட்ட அந்த 2 விரல்களுடன் அந்த வாலிபர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

துண்டித்த விரலை எப்படியாவது பொருத்திவிடுவார் கள் என்ற நம்பிக்கையில் சென்றுள்ளார். அந்த விரல்களைப் பரிசோதித்த மருத்துவமனையின் முடநீக்கியல் துறை அறுவை சிகிச்சை பிரிவுத் தலைவர் டாக்டர் சீனிவாசன் ராஜப்பா விரல்கள் சிதைந்து பொருத்த முடியாத நிலையில் இருந்ததை பார்த்துள்ளார்.

அதே விரல்களை மீண்டும் பொருத்துவது சாத்தியமில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் வலது கையில் விரல்கள் அவசியம். அதிலும் கட்டை விரல் கட்டாயம் தேவை என்பதால் மாற்று வழிகள்பற்றி மருத்துவர்களிடம் அந்த வாலிபர் கேட்டுள்ளார்.

அதற்குக் கால் விரலை எடுத்துக் கையில் பொருத்த முடியும் என்று டாக்டர் ராஜப்பா கூறியிருக்கிறார். காலில் ஒரு விரலை எடுப்பதால் எந்தப் பாதிப்பும் இல்லை என்பதால் அதற்கு ஒத்துக் கொண்டார். இதையடுத்து இந்தச் சிக்கலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர் சீனிவாசன் ராஜப்பா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தொடங்கினார்கள்.

அந்த வாலிபரின் இடது காலின் 2-வது விரலைத் துண்டித்து எடுத்துக் கைக்கட்டை விரலாகப் பொருத்த முடிவு செய்தனர். திட்டமிட்டபடி அறுவை சிகிச்சை செய்து அந்த வாலிபரின் கட்டை விரலுக்குப் பதில் கால் விரல் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு தற்போது அவர் நல்ல நிலையில் தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *