Supreme Court:செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு ஒத்திவைப்பு!

Advertisements

புதுடெல்லி:முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், ஜாமின் கேட்டுச் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவைச் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்துச் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், செந்தில்பாலாஜி மீதான 3 வழக்குகள்மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகச் சுப்ரீம் கோர்ட் கூறிய நிலையில் வழக்கைப் பிற்பகலுக்கு ஒத்திவைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று பிற்பகல் இறுதி வழக்காக விசாரிப்பதாகச் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி ஜாமின் மனு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை ஆகஸ்ட் 20-ந்தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.

ஆகஸ்ட் 20-ந்தேதி முதல் வழக்காகப் பட்டியலிடப்படும் என்றும் தாங்கள் எழுப்பிய கேள்விக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், ஜாமின் வழக்கை ஆகஸ்ட் 20-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *