Supreme Court:”மரண வாக்குமூலத்தை சந்தேகிக்க கூடாது”!

Advertisements

புதுடில்லி: ‘மரண வாக்கு மூலங்களை பதிவு செய்யும்போது நீதிபதிகளின் செயல்பாடுகளை சந்தேகிக்க முடியாது’ என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த ஜோதி என்ற பெண், கணவர் தன்னை தீ வைத்து எரித்ததாக மரண வாக்கு மூலம் அளித்து இருந்தார். மரண வாக்குமூலத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று(செப்.,03) விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘ 95% காயம் அடைந்திருந்த நிலையில், எப்படி ஜோதியால் சரியாக வாக்குமூலம் கொடுத்திருக்க முடியும்? ‘ மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘மரண வாக்குமூலங்களை பதிவு செய்யும் போது நீதிபதிகளின் செயல்பாடுகளை சந்தேகிக்க முடியாது’ என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *