Gem Politics: பாஜகவில் நடிகர் விஜய்!

Advertisements

பாஜகவில் சசிகலா, அன்புமணி நடிகர் விஜய் – அண்ணாமலை அதிரடி…

அதிமுகவுடன் கூட்டணி முறிந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி புதிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் பேரறிஞர் அண்ணா குறித்தும் பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சை கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறி அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது. இதனைத் தொடர்ந்து மேலிட அழைப்பின் பேரில் அண்ணாமலை டெல்லி சென்றார். அங்கு அதிமுக கூட்டணிகுறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார்.
இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்து அறிக்கை தரும்படி பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்பும் மேலிடதது பாரதிய ஜனதா கட்சி வருகிற ஜனவரி மாதம்வரை அண்ணாமலைக்கு கால அவகாசம் கொடுத்திருக்கிறது. நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் 20% ஓட்டுகளை பாரதிய ஜனதா கட்சி பெற வேண்டும் ஐந்து தொகுதிகளில் தனியாக வெற்றி பெற வேண்டும் முன்னதாக அதற்குரிய சாத்திய கூறுகள்குறித்து அறிக்கை தர வேண்டும் என அண்ணாமலைக்கு மேலிடம் உத்தரவிட்டிருக்கிறது
இது தவிர அதிமுக மீது எந்தவித தாக்குதலும் தொடுக்க வேண்டாம் பத்திரிகையாளர்கள்மீதும் கோபமாக நடந்து கொள்ள வேண்டாம் என்றும் பாஜக மேலிடம் அறிவுறுத்தி உள்ளது மேலிடம் அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் அதிமுக இல்லாத புதிய கூட்டணிக்குத் தயாராகி வருகிறார் அண்ணாமலை.
சமீபத்தில் அரசியல் களம் இறங்கப் போவதாக நடிகர் விஜய் அறிவித்துள்ள நிலையில் அவருடன் கூட்டணி வைத்தால் என்ன? என்ற முடிவுக்குப் பாரதிய ஜனதா கட்சி வந்திருக்கிறது. நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கினால் பாஜகவுடன் கூட்டணி. அப்படி இல்லாவிட்டாலும் விஜய் ரசிகர்களைத் தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என அண்ணாமலை திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்
 இதன் ஒரு கட்டமாக விஜய்யுடன் கூட்டணி குறித்தும் அல்லது பாரதிய ஜனதா கட்சிக்காகத் தேர்தல் வாய்ஸ் கொடுக்கவும் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே அதிமுக தரப்பில் இருந்தும் திமுக தரப்பிலிருந்தும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இதுவரை அழைப்பு வரவில்லை இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியைத் தங்களுடன் கூட்டணி சேர்த்துக் கொள்ளவும் அண்ணாமலை திட்டமிட்டு இருக்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாசிடம் இதுகுறித்து பேசுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே டெல்லி மேல் இடத்திற்கு சசிகலா ஒரு கடிதம் எழுதி உள்ளார் அந்தக் கடிதத்தில் ஆறு அமைச்சர்கள் தன் வசம் இருப்பதாகவும் அவர்கள்மூலம் அதிமுகவிற்கு தலைமை தாங்கும் திட்டம் இருப்பதாகவும் மேலும் ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் போன்றோரை ஒருங்கிணைத்துப் புதிய அதிமுக உருவாகும் என்றும் எனவே தனது தலைமையிலான அதிமுகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும்படி பாரதிய ஜனதா கட்சி மேலிடத்திற்கு கடிதம் எழுதி உள்ளார் இது குறித்தும் ஆலோசனை செய்வதற்காக அந்தக் கடிதம் அண்ணாமலைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.
அண்ணாமலை இது தொடர்பாக ஆலோசனைகள் செய்து வருகிறார். இதற்கிடையே தமிழ்நாடு பாஜக குறித்து ஆய்வு செய்திருக்கும் நிர்மலா சீதாராமன் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதே நல்லது என்று மேலி டத்திற்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *