செந்தில்பாலாஜியை பதவி நீக்கினால் ஆட்சி பறி போய்விடும் என்ற பயத்தில் ஸ்டாலின்!முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி !

Advertisements

சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: செந்தில்பாலாஜிக்காக சிறை விதிகள் மீறப்பட்டுள்ளது.விதிகளை மீறி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி செந்தில்பாலாஜிக்காக வசந்த மாளிகை போன்ற வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளது. ஸ்டாலினுக்கு தில், திராணி உள்ளதா? எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தவறு செய்தவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். அந்த தைரியம் ஸ்டாலினுக்கு உள்ளதா?செந்தில்பாலாஜியை நீக்கினால் ஆட்சி பறி போய்விடும் என்ற பயம் ஸ்டாலினுக்கு உள்ளது. அவர் ஏக்நாத் ஷிண்டேயாக மாறலாம். ஆட்சி போய் விடும் என்ற பயத்தில் உள்ளார். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *