Sri Venkateswara National Park: 6 வது சிறுத்தை சிக்கியது!

Advertisements

திருப்பதி வனப்பகுதியில் மேலும் ஒரு பிடிபட்ட நிலையில் வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தைகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது…

திருப்பதி நடைபாதையில் கடந்த மாதம் தனது பெற்றோருடன் பாதயாத்திரை சென்ற லக்ஷிதா என்ற 6 வயது சிறுமியைச் சிறுத்தை ஒன்று கவ்வி இழுத்து சென்று கடித்து கொன்றது. இந்தச் சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதேபோல் சிறுத்தையால் இழுத்து செல்லப்பட்ட சிறுவன் ஒருவன் மீட்கப்பட்டான்.

பலத்த காயம் அடைந்த சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இதனையடுத்து சிறுத்தை பிடிக்க உடனடி நடவடிக்கை தேவையெனப் பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடைபாதை மற்றும் வனப்பகுதியில் 300-க்கும் மேல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து 5 சிறுத்தைகள் வனத்துறை வைத்த கூண்டில் சிக்கின.சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் நடைபாதை அருகே கூண்டுகள் வைத்தனர்.

அடுத்தடுத்து 4 சிறுத்தைகள் கூண்டில் சிக்கியது. கூண்டில் சிக்கிய 4 சிறுத்தைகளும் திருப்பதியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடைபாதையில் 300-க்கும் மேல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

தற்போது மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியுள்ளது. அந்தச் சிறுத்தையைத் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முன்னதாகப் பிடிபட்ட 3 சிறுத்தைகள் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில், இரு சிறுத்தைகைள் திருப்பதி உயிரியல் பூங்காவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *