Velankanni: வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

Advertisements

நாகப்பட்டினம்:

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி, செகந்திராபாத், மும்பை ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளன எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, மும்பை பாந்த்ரா ரயில்நிலையம்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரயில்(09047) பாந்த்ரா ரயில்நிலையத்திலிருந்து நாளை(ஆக.27) காலை 10.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 8.35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுவழித்தடத்தில், வேளாங்கண்ணி- மும்பை வதோரா சிறப்பு கட்டண ரயில்(09048) ஆக.29-ம் தேதி அதிகாலை 4.50 மணிக்கு வேளாங்கண்ணி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 5.30 மணிக்கு வதோரா ரயில் நிலையத்துக்குச் சென்றடையும்.

இதேபோல, செகந்திராபாத்- வேளாங்கண்ணி சிறப்பு கட்டண ரயில்(07125) செப்.4-ம் தேதி காலை 8.40 மணிக்குச் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் புறப்பட்டு, மறுநாள் காலை 8.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுவழித்தடத்தில், வேளாங்கண்ணி- செகந்திராபாத் சிறப்பு கட்டண ரயில்(07126) செப்.6-ம் தேதி வேளாங்கண்ணியிலிருந்து அதிகாலை 12.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 12.30 மணிக்குச் செகந்திராபாத் சென்றடையும்.

செகந்திராபாத்- வேளாங்கண்ணி இடையே மற்றொரு சிறப்பு கட்டண ரயில்(07127) செகந்திராபாத் ரயில் நிலையத்திலிருந்து செப்.8-ம் தேதி காலை 8.40 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுவழித்தடத்தில், வேளாங்கண்ணி- செகந்திராபாத் சிறப்பு கட்டண ரயில்(07128) செப்.10-ம் தேதி வேளாங்கண்ணி ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 1.20 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1.30 மணிக்குச் செகந்திராபாத் சென்றடையும் எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *