Speaking for India Podcast: பிரதமர் மோடி மீது கடும் விமர்சனம்!

Advertisements

இந்திய ஜனநாயக அமைப்பை பாஜக சிதைக்கிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை:‘ஸ்பீக்கிங் பார் இந்தியா பாட்காஸ்ட்’ சீரிசின் 3வது ஆடியோ வெளியானது. அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இந்தியா என்பது கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. பல்வேறு அழகிய மலர்கள் நிரம்பிய அற்புதமான பூந்தோட்டம்.முதல்-அமைச்சராக இருந்தபோது மாநில உரிமை பற்றி பேசிய மோடி, பிரதமரான பின் மாநில உரிமைகளை பறிக்கிறார்.

மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. சிஏஜி மூலம் பாஜகவின் ஊழலை அம்பலப்படுத்திய அதிகாரிகளை விரைவாக கூண்டோடு மாற்றியுள்ளது பாஜக அரசு. இந்திய ஜனநாயக அமைப்பை சிதைக்கிறது பாஜக. மாநிலங்களை காப்போம், இந்தியாவை காப்போம், இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்போம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி இதுதான் உண்மையான ஜனநாயகம் என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *