
2023 FIFA Women’s World Cup | Spain women’s national football team | quarterfinal
ஸ்பெயின் அணி 5-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்திக் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது...
மெல்போர்ன் : 32 அணிகள் இடையிலான 9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகின்றன. இதில் கலந்து கொண்ட 32 அணிகளிலிருந்து சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், நார்வே, நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, சுவீடன், அமெரிக்கா, இங்கிலாந்து, நைஜீரியா, கொலம்பியா, ஜமைக்கா, ஆஸ்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ், மொராக்கோ ஆகிய 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய 2-வது சுற்று (நாக்-அவுட்) ஆட்டங்களுக்கு முன்னேறின.
2023 FIFA Women’s World Cup | Spain women’s national football team | quarterfinal
இதில் இன்று நடைபெற்ற நாக்-அவுட் ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்து – ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி கோல் மழை பொழிந்தது. இறுதியில் ஸ்பெயின் அணி 5-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி முதல் அணியாகக் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

