சௌமியா அன்புமணி கைது!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதை கண்டித்து பா.ம.க. மகளிரணி சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பா.ம.க. சார்பாகப் பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் அறிவிக்கப்பட்ட போராட்டத்திற்கு நுங்கம்பாக்கம் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் பா.ம.க. மகளிரணியினர் தடையை மீறிப் போராட்டம் நடத்தினர்.

வள்ளுவர் கோட்டத்துக்கு வந்த சவுமியா அன்புமணி காரிலேயே அமர்ந்து இருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழ்நாடு பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறி உள்ளது. குற்றவாளிகளைக் கைது செய்யலாமல் எங்களைக் கைது செய்வதில் என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *