
சிம் கார்டுகளுக்கு புதிய விதி முறைகள்! செப்டெம்பர் 30-தேதிக்குப் பிறகு பதிவு செய்யப்படாத சிம் கார்டுகளை விற்க கூடாது. மீறினால் 10 லட்சம் அபராதம் என ட்ராய் அறிவித்துள்ளது. இதுவரைபோலி சிம் கார்டுகள் மூலமாகச் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 56 லச்சம் சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளது…
மோசடிகள் பல விதம். அதிலும் மொபைல் ஆதிக்கம் அதிகமான டிஜிட்டல் உலகில் சர்வ சாதாரணமாக வித விதமான ஏமாற்று வேலைகள் அரங்கேறி வருகிறது. பண மோசடியில் தொடங்கி அனைத்து குற்றங்களும் மலிந்துள்ளதால், இதனைத் தடுக்கவே ட்ராய் புதிய விதிகளை நடைமுறைப் படுத்த திட்டமிட்டுள்ளது. இதுவரைபோலி சிம் கார்டுகள் மூலமாகச் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 56 லச்சம் சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளது.
போலி சிம் கார்டுகள் மூலமாகச் சட்ட விரோத செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர்.அதாவது மொத்தமாகச் சிம் கார்டுகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் சிலர் போலி சிம் கார்டு கனெக்ஷன் கொடுத்து அதிக பணம் பெறுகின்றனர்.இந்த நிலையில் புதிய விதிமுறையை ட்ராய் அறிவித்துள்ளது.
இந்த விதிமுறை அக்டோபர் 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.செப்டெம்பர் 30-தேதிக்குப் பிறகு பதிவு செய்யப்படாத சிம் கார்டுகளை விற்க கூடாது. மீறினால் 10 லட்சம் அபராதம் என ட்ராய் அறிவித்துள்ளது.
முதலில் டெலிகாம் ஆப்பரேட் பாயிண்ட் ஆப் சேல் பதிவு மற்றும் வெரிஃபிகேசன் செய்யப்பட வேண்டும்.சிம் விற்பனயாளர் கார்ப்பரேட் அடையாள அட்டை, பிசினஸ் லைசென்சு இவற்றுடன் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் உள்ளூர் வசிப்பிடம், பணியாற்றும் முகவரி போன்றவற்றுடன் இ.கே.ஒய்.சி முதலான பயோமெட்ரிக் விவரங்களை வழங்க வேண்டும் என்றும்.பின்பு டெலிகாம் ஆப்பரேட்டர் பிஓயெஸ் எழுத்து பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கஸ்டமர் என்ரோல்மெண்ட், ஏரியா ஆப் ஆபரேசன் குறித்த தகவல் பதிவு செய்யப்படும். பிறகே, பிஓயெஸ் ஐடி யினை ”ட்ராய்” வேலிடிட்டி வழங்கும்.
இப்படியாக ஐடி விர்பனையாளகள் மட்டுமே வாடிக்கையாளர்களைப் பதிவு செய்து சிம் கார்டு விற்பனை செய்ய முடியும். விதி மீறினால் 24 மணி நேரத்திற்குள் ப்ளாக் செய்யப்படும் என்று ட்ராய் அறிவித்துள்ளது.

