Sexual Harassment: வெளிநாட்டு பெண்ணைப் பலாத்காரம் செய்த மர்ம கும்பல்!

Advertisements

தடுக்க முயன்ற பெண்ணின் கனவரையும் அந்தக் கும்பல் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.

ராஞ்சி: ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இதற்காக இருசக்கர வாகனத்தில் ஜார்கண்ட் வந்த அவர்கள், அதன் பின்னர் நேபாளம் செல்லத் திட்டமிட்டு இருந்தனர்.

தலைநகர் ராஞ்சியிலிருந்து 300 கி.மீத்தொலைவில் உள்ள ஹன்ஸ்திஹா காவல் நிலையப் பகுதியில் இரவு நேரத்தைக் கழிக்க நினைத்த அவர்கள், இதற்காக அப்பகுதியில் ஒரு தற்காலிக கூடாரம் அமைத்துத் தங்கினர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த அடையாளம் தெரியாத 7 பேர் கொண்ட கும்பல், வெளிநாட்டு பெண்ணை வலுக்கட்டாயமாகக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனைத் தடுக்க முயன்ற பெண்ணின் கணவரையும் அவர்கள் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண் தும்கா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேரைக் கைதுசெய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதுடன், எஞ்சியவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *