Senthil Balaji:சிறையிலிருந்து செந்தில் பாலாஜி வெளியே வருவதில் சிக்கல்!

செந்தில் பாலாஜி சிறையிலிருந்து வெளியே வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் சில குழப்பங்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரீம் கோர்ட்டு கூறியபடி செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்காக 2 பேர் உத்தரவாதம் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த உத்தரவாத்தை விசாரணை அதிகாரியிடம் தாக்கல் செய்யுங்கள் என நீதிபதி கார்த்திகயேன் தெரிவித்தார்.

மேலும், சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் சில குழப்பங்கள் இருப்பதாகவும் உத்தரவாதத்தை நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடவில்லை என்றும் நீதிபதி கார்த்திகேயன் கூறினார். இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சிறையிலிருந்து செந்தில் பாலாஜி வெளியே வருவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *