Sellur Raju:அண்ணாமலை: நான் பார்த்தேன்.. நீங்களும் பாருங்கள்.. பங்கம் செய்த செல்லூர் ராஜூ

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளது.

இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் ஒருவர். அங்கு தங்கி படிப்பவர்களுக்கான செலவை பல்கலைக்கழகமே ஏற்றுக்கொண்டுள்ளது.

இதற்காக அண்ணாமலை நேற்று இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டார். 3 மாதங்கள் லண்டனில் தங்கி படிக்கும் அண்ணாமலை வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்புகிறார்.

இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் சென்றுள்ளதை கிண்டலடிக்கும் விதமாகஅதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் பக்கத்தில்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர், “தமிழக பாஜகத் தலைவர் திரு அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் சென்றதை ஒரு குறும்புக்கார் ஊடகத்தில் இப்படி போட்டு இருக்கார் நான் பார்தேன் நீங்களு பார்ப்பதற்காக !!!” என்று குறிப்பிட்டு, வீடீயோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ஆடுகள் பாடம் படிப்பதை போன்று காட்சியளிக்கிறது.

 

https://x.com/SellurKRajuoffl/status/1829089247745192330

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *