Sellur K. Raju:மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு… ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

கடந்த சில நாட்களுக்கு முன் ராகுல் காந்தியை புகழ்ந்து வீடியோ பதிவிட்ட செல்லூர் ராஜூ அதனை நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை:அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர் உங்களுக்குப் பிடித்த இளம் தலைவரோடு பிறந்தநாள்… என்று கூறியதற்கு செல்லூர் ராஜூ கூறியதாவது:-

மாற்றத்தான் தோட்டத்துக்கு மல்லிக்கைக்கும் மணம் உண்டு. ஆக, எதிரி தோட்டத்தில் பூத்த மல்லிகைக்கு வாசம் இல்லை என்று சொல்ல முடியுமா? சொல்ல முடியாது. ராகுல் காந்தியின் முயற்சி, விடா முயற்சி, காங்கிரசை கட்டிக் காக்க நினைக்கிறார். அவருக்கு இந்த நேரத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ராகுல் காந்தியை புகழ்ந்து வீடியோ பதிவிட்ட செல்லூர் ராஜூ அதனை நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *