
விஜயலட்சுமியின் ஒரிஜினல் புருஷன் யார்? சீமான் அதிரடி தகவல்…
“உனக்கு வேறொரு புருஷன் இருக்கிறான் அதை விட்டுவிட்டு என்னைப் போய்ப் புருஷன் என்கிறாயே நான் என்ன சவளை பையனா ?’என்று சீமான் ஆவேசமாகப் பேசினார்.
சென்னையில் நிருபர்களைச் சந்தித்த நாம் தமிழர் சீமான் பேசும்போது…. நடிகை விஜயலட்சுமிக்கு ஜெகதீஷ் என்று ஒரு புருஷன் இருப்பதாக அவரே சொல்லி இருக்கிறார். அவருடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். அவர் புருஷன் என்றால் நான் யார்?
2021 இல் ஜெகதீஷை திருமணம் செய்த நடிகை விஜயலட்சுமி 2023ல் மறுபடியும் சீமான் தான் புருஷன் என்று சொன்னால் நான் என்ன சவலை பையனா ? போற வர்றவன் எல்லாம் சொந்தம் கொண்டாடுவதற்கு?
இதை எப்படி இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்கிறது. 15 வருஷமாக ஒரு பெண் என்மீது குற்றம் சுமத்தி கொண்டே இருக்கிறார் நீங்களும் அதை ரசித்து ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் இது கேவலம் அருவருக்கத்தக்கது
இனி என்னிடம் பதில் கிடைக்காது. வீர லட்சுமி விஜயலட்சுமி யாராக இருந்தாலும் நீதிமன்றத்துக்கு வாருங்கள் அங்குப் பேசுங்கள் நீதிபதியிடம் சொல்லுங்கள் சான்றுகளைக் காட்டுங்கள் மேலும் மேலும் கேவலப்படுத்திக் கொண்டே இருந்தால் ஒரு அளவு இருக்கிறது இனி எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் தான் பேச வேண்டும் என்று கூறினார் சீமான்

