Speaking for India: இரண்டாவது ஆடியோ உரை வெளியானது!

இந்திய கூட்டணி மோடியின் பிம்பத்தைக் கிழித்துவிட்டது! இரண்டாவது ஆடியோ வெளியிட்டுபாஜக மீது கடும் விமர்சனம்…

சென்னை: ‘ஸ்பீக்கிங் பார் இந்தியா’ (Speaking for India) என்ற தலைப்பில் ஆடியோ பதிவுமூலம் தமிழக மக்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடி வருகிறார். அண்மையில் அவரது முதலாவது ஆடியோ உரை வெளியான நிலையில், இன்று 2-வது உரை வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இன்று வெளியாகி உள்ள ஆடியோ உரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “2014, 2019 தேர்தலில் ஏமாந்தது போல் 2024 தேர்தலிலும் மக்கள் ஏமாந்து விடக் கூடாது.

2024 தேர்தலில் பாஜக ஒட்டு மொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும். 60 மாதங்கள் கொடுங்கள் இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றுவேன் என்று மோடி கூறினார். அவருக்கு 60 மாதங்கள் மட்டுமில்லை. கூடுதலாக இன்னொரு 60 மாதங்களையும் இந்திய மக்கள் வழங்கினார்கள். வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றி விட்டாரா என்ற கேள்விக்குப் பிரதமர் பதிலளிக்க வேண்டும்.வகுப்புவாதம், ஊழல், மூலதனக் குவியல், மோசடி, அவதூறுகள் கொண்டதாகப் பாஜக அரசு உள்ளது.

பாஜகவின் வகுப்புவாத, கார்ப்பரேட் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே குரலாக முழங்க வேண்டும். இந்திய கூட்டணியின் பரப்புரை பாஜக கட்சி, பிரதமர் மோடியின் பிம்பத்தைக் கிழித்துவிட்டது. பல்வேறு மாநிலங்களில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட்டிருக்கிறது. சிஏஜி அறிக்கைகுறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் ஏன் விவாதிக்கவில்லை? அயோத்தியா திட்டத்தில் கூட ஊழல் செய்த கட்சிதான் பாஜக என்று சிஏஜி அறிக்கை கூறியுள்ளது. அயோத்தியா திட்டம் முதல் ஆயுஷ்மான் பாரத் திட்டம்வரை ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *