
நடிகை சமந்தா தனது உடல்நிலை பூரண குணம் ஆகியவுடன் மீண்டும் அவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் 2023ம் ஆண்டின் கடைசி வொர்க் அவுட் என்று பதிவு செய்துள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்காகச் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்காக அவர் திரையுலகிலிருந்து தற்காலிகமாக விலகி உள்ளார்.

கடைசியாக அவர் நடித்த ‘சாகுந்தலம்’ மற்றும் ‘குஷி’ ஆகிய இரண்டு படங்கள் கடந்த ஆண்டு வெளியானது. இதில் ’குஷி’ நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது உடல்நிலை பூரண குணம் ஆகியவுடன் மீண்டும் அவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் நடிகை சமந்தா அதிக எடையைக் கொண்ட பளு தூக்கும் காட்சிகளைப் பார்க்கும்போது அவர் முழுமையாக உடல் நிலையில் ஃபிட் ஆகிவிட்டார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


