Sankarapuram: சாதி பாகுபாடோடு குடிநீர் வழங்கல்.. கொந்தளிக்கும் பட்டியலின மக்கள்!

Advertisements

சங்கராபுரம் அருகே குடிநீர் வழங்குவதில்  ஊராட்சி நிர்வாகத்தினர் பிரிவினையை ஏற்படுத்தி சாதியை பாகுபாடுடோடு குடிநீர் வழங்கியதால் கழிவு நீரை குடிக்கும் பட்டியலின மக்கள் பல்வேறு நோய்த்தொற்று ஆளாகியுள்ளனர் கிராமமக்கள், நல்ல குடிநீர் எடுக்க சென்றால் சாதிய தீண்டாமை என்று சொல்லும் பேச்சு தினம் தினம் அவமானங்களையும் தீண்டாமை எனம் பேச்சில் நெருப்பாற்றில் மீண்டும் பட்டியலின மக்கள் அல்லாடிவருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பிரம்மகுண்டம் கிராமத்தில் 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே கிராமத்தில் 2000 -த்திர்க்கும்  மேற்பட்ட பட்டியல் இனமக்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் காலம் காலமாக ஆற்றுப்பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மூலம் நல்ல குடிநீர் வழங்கப்பட்டு வந்தன.

ஆனால் திடீரென  ஊராட்சி  நிர்வாகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிநீர் வழங்குவதில் தரம் பிரித்து சாதியபாகுபாடு காட்டி அதே கிராமத்தில் வசிக்கும் மாற்று சமூகத்தினருக்குமட்டும் ஆற்றுப்பகுதியில் அமைக்கப்பட்ட   ஆழ்துளை கிணறு மூலம்  நல்ல குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் அந்த கிராமத்தில் இருந்து வரும் ஒட்டுமொத்த சாக்கடை நீரும் கழிவு நீரும் ஒன்றாக வந்து சேரும்  அத்திக்குட்டை என்னும் பகுதிக்கு செல்கிறது  ஊராட்சி நிர்வாகம் அத்தி குட்டை அருகே ஆழ்துளை கிணறு அமைத்து பட்டியலின மக்களுக்கு மட்டும சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த அத்தி குட்டையில் துர்நாற்றம் வீசுவது உடன் இறைச்சி கழிவுகள் மனித கழிவுகள்   சாக்கடை  கழிவுநீர் தேங்கி நிற்பதால் ஊராட்சி நிர்வாகம் அதன் அருகில் ஆழ்துளை கிணறு அமைத்ததால் மின்மோட்டார் மூலம் உறிஞ்சும் போது அத்தி குட்டையில் இருந்து சுகாதாரமற்ற சாக்கடை நீரும் கழிவு நீரும் கலந்து வருவதால் ஒரு விதமான துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு டெங்கு மலேரியா காலரா,  வாந்திபேதி ,மயக்கம் வயிற்றுப்போக்கு உடல் அரிப்பு பல்வேறு விதமான நோய் தொற்றுக்கும் ஆளாகுவதாகவும் தோல் நோய்கள்   ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அத்திக் குட்டை பகுதியில் இருந்து வரும் நீரை சமையலுக்கு பயன்படுத்தினால் சாதம் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதாகவும் இதனால் சாப்பாட்டின் தன்மையே மாறுவதாகவும் இதனால் தினம் தினம் நல்ல குடிநீருக்காக அலைந்து திரிவதாகவும் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். மேலும் அத்தி குட்டை நீரினால் பட்டியலின மக்களின் குழந்தைகளுக்கு அடிக்கடி வாந்தி பேதி மயக்கம் ஜுரம் வயிற்றுப்போக்கு ஏற்படுவதாகவும் இதனால் தினம் தினம் மருத்துவமனைக்கு சென்று  வருவதாகவும் கூறுகின்றனர்.

மேலும் நல்லகுடிநீருக்காக மாற்று சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு சென்று தண்ணீர் எடுக்கச் சென்றால் அங்குள்ள மக்கள் நீங்கள் எல்லாம் இங்கு வரக்கூடாது. இங்கு வந்து தண்ணீர் எடுக்கக்கூடாது இங்கு நீங்கள் வந்து தண்ணீர் எடுத்தாள் நாங்கள் எல்லோரும் தீட்டாகிவிடுவோம் சாமி குத்தம் ஆகிவிடும். சாதி ரீதியாக பேசி அசிங்கப்படுத்துவதாகவும் அவமானப்படுத்துவதாகவும் கண்ணீர் மல்க கூறுகின்றனர்.

ஊராட்சி நிர்வாகத்தினர் சாதி மோகத்தோடு பிரிவினை ஏற்படுத்தும் வகையில் குடிநீர் வழங்குவதில்  இது போன்ற அவமானங்களும் சாதிய கொடுமைகளும் சந்திக்க நேரிடுவதாகவும் கூறுகின்றனர் மேலும் நல்ல குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் வழங்கக் கூடாது எனவும் ஊராட்சி நிர்வாகத்திடமும் ஊராட்சி ஒன்றிய பலமுறை மனுக்கள் அளிக்கும் கோரிக்கை வைத்தும்இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வருத்தத்தோடு கூறுகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பிரம்ம குண்டம் கிராமத்தில் வசிக்கும் பட்டியல மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *