Samantha:காதலிப்பதாக வதந்தி…. புகைப்படம்மூலம் பதிலளித்த சமந்தா..!

Advertisements

நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவருக்குத் தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்கிறார்.

நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். நடிகை சமந்தா தற்போது ‘சிட்டாடல்’ தொடரில் நடித்துள்ளார். இதனைப் பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ் இயக்கி இருக்கிறார்.கிறார்.

இதனைத்தொடர்ந்து, நடிகை சமந்தா சிட்டாடல் தொடர் இயக்குனர் ராஜை காதலிப்பதாக இணையத்தில் வதந்தி பரவியது. இந்நிலையில், சமந்தா புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இந்த வதந்திக்குப் பதிலளித்துள்ளதாகத் தெரிகிறது.

அதில், ‘அமைதியின் அருங்காட்சியகம்’ என்று எழுதியிருக்கும் ஆடையைச் சமந்தா அணிந்திருக்கிறார்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், இந்தப் பதிவு நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தத்திற்கு என்றும், சிலர், இயக்குனரைக் காதலிப்பதாகப் பரவிய வதந்திக்குப் பதிலடி கொடுக்கும் பதிவு என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில், நாகசைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *