Saba Nayagan: இரண்டாவது பாடல் வெளியானது!

Advertisements

அசோக் செல்வன் நடித்துள்ள’சபா நாயகன்’. படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை: தமிழில் ‘சூதுகவ்வும்’ படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. மேலும் நித்தம் ஒரு வானம், சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல், மன்மத லீலை உள்ளிட்ட படங்களில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இதைத்தொடர்ந்து இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் ‘சபா நாயகன்’. இந்த படத்தில் மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சவுத்ரி, மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, உடுமலை ரவி, அருண் குமார், ஜெய்சீலன் சிவராம், ஸ்ரீராம் கிரிஷ், ஷெர்லின் சேத், விவியாசாந்த், அக்சயா ஹரிஹரன், துளசி சிவமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘சீமக்காரியே’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கார்த்திக் நேத்தா எழுதியுள்ள இந்த பாடலை சஞ்சித் ஹெக்டே பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *