S. Somanath: சம்பளம் விவகாரம்!

இஸ்ரோவின் இயக்குநரான சோம்நாத் வருமானம்குறித்த செய்தி வைரலாகி வருகிறது. ஆர். பி. ஜி. கோயங்கோ தமது போஸ்டில், சோம்நாத்துக்கு 2.5 லட்சம் மாதச் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இது மிகவும் குறைவு…

திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக நான்கு ஆண்டுகள் கடந்த பின்பு சோமநாத் பொறுப்பேற்றார். இரண்டரை ஆண்டுகள் திரவ உந்து அமைப்பு மையத்தின் வலியமலை இயக்குனராகவும் பணியாற்றினார்.மேலும் இவர் கொல்லம், பெங்களுருவில் முறையே இளநிலை, முதுநிலை பட்டங்களைப் பெற்றார். பிஎஸ்எல்வி யின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருந்தார்.

லான்ச் வாகனங்களின் சிஸ்டம் கட்டமைப்பில் சிறப்பாகப் பணியாற்றினார்.இஸ்ரோவிடமிருந்து `மெரிட் விருது” டீம் எக்செலன்ஸ் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார். இவர் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இந்தியா சமீபத்தில் உலக அளவில் சந்திரயான் -3, ஆதித்யா எல்.1 ஆகிய வற்றை வெற்றிகரமாக அனுப்பி உலக அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், இஸ்ரோவின் இயக்குநரான சோம்நாத் வருமானம்குறித்த செய்தி வைரலாகி வருகிறது. ஆர். பி. ஜி. கோயங்கோ தமது போஸ்டில், சோம்நாத்துக்கு 2.5 லட்சம் மாதச் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இது மிகவும் குறைவு.

ஒரு நாட்டின் முதுகெலும்பாக, விஞ்ஞானம் உள்ளது. கணினி யுகத்தில் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தி உலகையே அண்ணாந்து பார்க்க வைத்த திட்ட இஸ்ரோவின் இயகுந்ருக்கு மாத சம்பளம் இவ்வளவு குறைவாகக் கொடுப்பது மிகவும் வேதனையான விஷயம். அதே அவர் என்னுடைய நிறுவனத்தில் இருந்தால் 3 கோடி மாதச் சம்பளமாகத் தருவேன் என்று கூறியிருப்பது பேசு பொருளாகி உள்ளது. ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *