Russia Election 2024: ரஷிய தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு.. மீண்டும் புதினே அதிபராக வாய்ப்பு!

Advertisements

மாஸ்கோ லெவாடா மையம் நடத்திய கருத்து கணிப்பில் சுமார் 86 சதவீதம் பேர் புதினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மாஸ்கோ: ரஷியாவில் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று தொடங்கியது. இந்தத் தேர்தல் இன்றும், நாளையும் நடக்கிறது. உக்ரைனுடான போருக்கு மத்தியில் ரஷியா முழுவதிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் 1 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதிபர் தேர்தல் தொடங்கியுள்ளது. காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். ரஷ்ய பகுதிகள் மற்றும் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்கள் முதல் முறையாக இந்தத் தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

இந்தத் தேர்தலில்நான்குமுனை போட்டி நிலவுகிறது. அதிபர் புதின் சுயேட்சையாகப் போட்டியிடும் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயக கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன. வலுவான எதிர்க்கட்சி வேட்பாளர் இல்லாததால் புதின் 5-வது முறையாக அதிபராக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் 5-வது முறையாக மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. மாஸ்கோ லெவாடா மையம் நடத்திய கருத்து கணிப்பில் சுமார் 86 சதவீதம் பேர் புதினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக வலம் வரும் புதின் ரஷ்யாவின் அதிபராகச் சுமார் 20 ஆண்டு காலமாகப் பதவி வகித்து வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *