Rohit Sharma:மைதானத்தின் மண்ணை சாப்பிட்டது ஏன்..? ரோகித் விளக்கம்!

Advertisements

டி20 உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெற்றபின் பார்படாஸ் மைதானத்தின் மண்ணை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சாப்பிட்டார்.

பார்படாஸ்:அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று முடிந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதை ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்களின் இறுதிப்போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருந்தது. இதனால் உணர்ச்சி வசப்பட்ட ரோகித், இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் பார்படாஸ் மைதானத்தின் மண்னை சாப்பிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இதற்கான காரணம்குறித்து ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளது பின்வருமாறு:- “அது போன்ற விஷயங்களை என்னால் விவரிக்க முடியாது என்று நினைக்கிறேன். ஏனெனில் அது கதையாக எழுதப்பட்டது கிடையாது. அவை அனைத்தும் உள்ளுணர்விலிருந்து வருவதாகும். அந்தத் தருணத்தில் பிட்ச் அருகே சென்று அதை நான் உணர்ந்தேன். ஏனெனில் அந்தப் பிட்ச்தான் எங்களுக்கு இந்த வெற்றியைக் கொடுத்தது. அதில் விளையாடி நாங்கள் வென்றோம்.

என்னுடைய வாழ்நாள் முழுவதும் இனிமேல் அந்தப் பிட்ச் மற்றும் மைதானத்தை மறக்கமாட்டேன். எனவே அதனுடைய சிறிய பகுதியை எடுத்துச் செல்ல விரும்பினேன். அந்தத் தருணம் மிகவும் ஸ்பெஷலானது. அந்த இடத்தில்தான் எங்களுடைய கனவு நிஜமானது. எனவே அதைக் கொஞ்சம் நான் வைத்துக் கொள்ள விரும்பினேன். உலகக்கோப்பையை வென்றது உண்மையில் அற்புதமான உணர்வு. அது இன்னும் மூழ்கவில்லை என்று நான் சொல்வேன். அது ஒரு அற்புதமான தருணம் என்பது உங்களுக்குத் தெரியும். அது நடந்தாலும் நடக்கவில்லை என்று நாம் உணர்கிறோம். ஆனால் அதுவே நடந்தது. அது மகத்தான தருணம்” என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *