Road Safety Month Festival: ஹெல்மெட் அணிந்தவாறு பேரணியாக வந்து விழிப்புணர்வு!

Advertisements

பவானி உட்கோட்ட காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத  விழாவை ஒட்டி ஐம்பதுக்கு மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் போலீசார் ஹெல்மெட் அணிந்தவாறு இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழகம் முழுவதும் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழாவை ஒட்டி போக்குவரத்து போலீசார் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தவாறு பிரதான சாலைகளில் பேரணியாக வந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து பவானி உட்கோட்ட காவல்துறையினர் சார்பில்  பவானி போக்குவரத்து போலீசார்., பவானி நகர போலீஸார்., ஆப்பக்கூடல் போலீசார்., அம்மாப்பேட்டை போலீசார்., வெள்ளித்திருப்பூர் போலீசார்., அந்தியூர் போலீசார் உள்ளிட்ட காவல் நிலையங்களை சார்ந்த 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தலைக்கவசம் அணிந்தவாறு 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பேரணியாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.,

முன்னதாக பேரணியினை பவானி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி கொடியைசைத்து துவக்கி வைத்தார்., நடைபெற்ற பேரணியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணகுமார்.,  பவானி காவல் ஆய்வாளர் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *