ஞானேஷ் குமார் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இனியும் பதவியில் நீடிக்க கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், சிறப்புத் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலிலிருந்து கோடிக்கணக்கான மக்களின் பெயர்களை நீக்கும் முடிவுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறியுள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு அவசர கதியில் நடத்தப்பட்ட இந்தப் பணியில் பல குளறுபடிகள் நடந்தன என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வெளியாகியுள்ள செய்தி, வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்ததிற்குப் பின்பு நடந்த அனைத்துச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளதாகக் கூறியுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்ற தேர்தல் ஆணையர்கள் இருவரின் ஒப்புதல் இல்லாமல் தன்னந்தனியாக, இரகசியமாகச் செயல்பட்டு வந்துள்ளது அம்பலம் ஆகியுள்ளதாகக் கூறியுள்ளார்.
எனவே, ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தநடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *