Renjusha Menon: பிணமாக மீட்ப்பு!

Advertisements

தூக்கில் தொங்கிய நிலையில் நடிகை பிணமாக மீட்ப்பு!

மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் திருவனத்தபுரம் அடுத்த காரியம் பகுதியில் உள்ள தனது வீட்டில்,  தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். தனது கணவர் மனோஜ் மற்றும் தந்தையுடன் அவர் அந்த வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவர் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்ததாக கூறப்படும் நிலையில், அவர் தற்கொலை செய்துள்ளார்.
அதேநேரம், இது தற்கொலை தானா? அல்லது ரெஞ்சுஷா மேனன் கொலை செய்யப்பட்டாரா? என்ற நோக்கத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடயே, நடிகையின் உடல் பிரேத பரிசோதனைக்கான மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நடிகை உயிரிழந்த தகவல் வெளியானதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும், அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தன்னுடன் சேர்ந்து ‘ஆனந்த ராகம்’ தொடரில் நடிக்கும், ஸ்ரீதேவி அனிலுடன் இணைந்து செய்த ரீல்ஸ் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் ரெஞ்சுஷா பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக, ரசிகர்கள் அந்த பதிவின் கீழ் நடிகைக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *