Ramanathapuram District Tiruvadanai: ஆண் சடலம் மீட்பு!

திருவாடானை அருகே தனியார் கட்டிடத்தின் வாசலில் ஆண் சடலமாக கண்டெடுக்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சின்னகீரமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தின் வாசலில் சுமார் 48 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக திருவாடானை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில்திருவாடானை காவல் சார்பு ஆய்வாளர் மூர்த்தி, தனி பிரிவு காவலர் அருண் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவாடானை தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் மேல்பனையூர் கிராமத்தைச் சேர்ந்த சேஷாத்திரி மகன் சுரேஷ் (48) என்பதும் இவருக்கு திருமணம் ஆகி 20 வருடங்களுக்கு மேலான நிலையில் மனைவி குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாககூறப்படுகிறது.

 

மேலும் அவர் சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்த நிலையில் இரவு சின்னக்கீரமங்கலத்தில் ஊராட்சி மன்றம் அலுவலகம் எதிரில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் படுத்து தூங்கியவர் காலையில் மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்து சுரேஷ் உடல்நிலை பாதிக்கபட்டதால் இறந்துள்ளாரா அல்லது இறப்பில் வேறு ஏதேனும் மர்மம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *