
டீப் நெக் ஆடையில் தாராள கவர்ச்சியில் அசத்தல் போஸ் கொடுத்த அயலான் நாயகி – ரகுல் ப்ரீத் சிங் மைல்டு ஹாட் போட்டோஸ் இணையத்தில் பரவிவருகிறது.
புதுடெல்லியில் பிறந்து கடந்த 2009 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் ரகுல் பிரீத் சிங். தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான “தடையற தாக்க” என்கின்ற திரைப்படம் தான் இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம்.
கடந்த 14 ஆண்டுகளாக இந்திய மொழிகள் பலவற்றுள் சிறந்த நாயகியாக விளங்கிவரும் ரகுல் ப்ரீத் சிங் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஹிந்தி மொழியிலும் நல்ல பல படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் இவர் தெலுங்கு திரையுலகில் தான் இப்போது பெரிய அளவில் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் நல்ல வரவேற்பை பெற்று கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் தேவ் படங்களிலும், சூர்யாவின் என்ஜிகே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் புகழை பெற்ற ரகுல் ப்ரீத் சிங், இறுதியாகச் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று ஜனவரி 12ம் தேதி வெளியான அயலான் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதேபோல இவ்வாண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியாகவுள்ள இந்தியன் 2 திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார். மேலும் ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிஸியான நாயகியாக அவர் வளம் வந்து கொண்டிருக்கிறார்.


