அவதூறு கருத்துக்களை மட்டுமே பரப்புகிறது திமுக – ஆதவ் அர்ஜுனா விமர்சனம்.!

தி.மு.க-வின் தற்போதைய மேடைகள், அவதூறு கருத்துக்களை மட்டுமே பரப்பிக் கொண்டிருக்கும் அருவருப்பான மேடைகளாக மாறிவிட்டதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அரசியல் மேடைகள் தந்தை பெரியார் காலத்தில் பகுத்தறிவைக் கற்பிக்கும் பள்ளிகளாக இருந்ததாகவும், அறிஞர் அண்ணா காலத்தில் அரசியல் அறிவை வளர்க்கும் பல்கலைக்கழகங்களாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் தி.மு.க-வின் தற்போதைய மேடைகள், அவதூறு கருத்துக்களை மட்டுமே பரப்பிக் கொண்டிருக்கும் அருவருப்பான மேடைகளாக மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தி.மு.க மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பெண் பேச்சாளர் ஒருவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை மிகவும் தரக்குறைவான முறையில் விமர்சனம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க மேடையில் அநாகரீக முறையில் பேசிய அந்தப் பெண் பேச்சாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். தி.மு.க-வின் இதுபோன்ற ஆபாச நடவடிக்கைளால், அந்தக் கட்சியும் அதன் தலைமையும்  தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் இல்லங்களில் இருந்து முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும் என்பது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *