
வருகிற சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக நடிகை கௌதமி விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் இன்னும் யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்கள் என்ற பட்டியலை இப்போது பார்க்கலாம்.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன . தற்பொழுது தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருவதால் அதிமுக தலைமை அலுவலகம் மிக உற்சாகமாக காட்சியளிக்கிறது.
அந்த வகையில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் நடிகையுமான மான கௌதமி விருப்பமனு தந்து இருக்கிறார். செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விழுப்புரம் பாசறை மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் விருப்ப மனு கொடுத்திருக்கிறார் .
அதிமுக மாதவரம் கிழக்கு பகுதி செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் கண்ணதாசன் மாதவரம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருக்கிறார். திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கவுன்சிலர் ஜனார்த்தனன் விருப்பமனு கொடுத்திருக்கிறார் .
அதிமுக மாணவரணி சிவகங்கை மாவட்ட தலைவர் முத்துக்குமார் நாகராஜன் பரமக்குடி தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருக்கிறார் . இதே பரமக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுக அம்மா பேரவை துணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ சதன் பிரபாகரன் விருப்பமனு கொடுத்திருக்கிறார் .
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி பி பி பரமசிவம் விருப்பமனு கொடுத்திருக்கிறார் . இதே வேடசந்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி குஜிலியம்பாறை ஒன்றிய செயலாளர் மலர் வண்ணன் மாணவரணி மாநில பொருளாளர் கோகுல் கௌதம் ஆகியோரும் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடுவதற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் வேம்பையார் கண்ணன் விருப்பமனு கொடுத்திருக்கிறார் . தஞ்சாவூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் தியாகராஜன் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு விருப்பமனு கொடுத்துள்ளார் .
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக முன்னாள் நகர் மன்ற தலைவர் எஸ் ஆர் ஜவகர் பாபு விருப்பமனு கொடுத்திருக்கிறார் . ஏற்கனவே முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியிலபோட்டியிட விருப்ப மனு கொடுத்து இருந்தார் .
முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி மாதவரம் தொகுதியில் போட்டியிட மனு கொடுத்திருந்தார் . அதிமுக எம்பி தனபால் மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக அவரது மனைவி காயத்ரி தனபால் விருப்பமனு கொடுத்து இருந்தார் .
வேளச்சேரி மேற்கு அதிமுக மாவட்ட செயலாளர் எம் ஏ மூர்த்தி வேளச்சேரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருக்கிறார் . முன்னாள் அமைச்சர் முனைவர் வைகைச் செல்வன் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருக்கிறார் .
முன்னாள் எம்எல்ஏ முருக குமரன் காட்டுமன்னார்கோவில் திட்டக்குடி தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார் . அதிமுகமாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் பா சரவணன் மதுரையில் பத்து தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் காமராஜ் நன்னிலம் தொகுதியில் போட்டியிட மீண்டும் விருப்பமனு கொடுத்துள்ளார் . அதிமுக தலைமை அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு விநியோகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .


